துணைத்தலைவர் உத்தரவில் கூறியிருப்பது என்ன?
துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜெக்தீப் தன்கர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக கூறி எதிர்கட்சி எம்பிக்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ராஜ்யசபா வரலாற்றில் முதல்முறையாக சபை தலைவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட முதல் தீர்மானம் இது. எதிர்க்கட்சிகளின் இந்த தீர்மானம், துணை ஜனாதிபதியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் தீர்மானத்தை நிராகரித்தார். அவரது உத்தரவில் கூறியிருப்பதாவது: நம்பிக்கையில்லா தீர்மானம் மிகுந்த குறைபாடுகளை கொண்டுள்ளது.
டிச 19, 2024