உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு எய்ம்ஸ் ஆஸ்பிடலில் சிகிச்சை

முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு எய்ம்ஸ் ஆஸ்பிடலில் சிகிச்சை

#JagdeepDhankar #FormerVicePresident #DhankarAdmittedinHospital #DelhiAiims #DelhiNews ராஜஸ்தானை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஜெகதீப் தன்கர், வயது 75. எம்எல்ஏ, எம்பி, மத்திய அமைச்சர், கவர்னர் என பல்வேறு பதவிகள் வகித்த இவர், 2022ல் நாட்டின் துணை ஜனாதிபதியானார். ராஜ்யசபாவை திறம்பட வழிநடத்தி இவர், உடல் நிலை காரணமாக கடந்த ஆண்டு மத்தியில் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா குறித்து அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும், பின் அது பெரிய அளவில் பேசுபொருள் ஆகவில்லை. ஏற்கனவே நெஞ்சு வலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை பெற்ற தன்கர், சில நாட்களாக ஓய்வில் இருந்து வந்தார். டில்லியில் வசிக்கும் தன்கர், இன்று காலை வழக்கமான நடைபயிற்சிக்கு சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார். உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் உடனே அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு எய்ம்ஸ் டாக்டர் ஒருவர் முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளார். பின் டாக்டரின் அறிவுரைப்படி ஆம்புலன்ஸ் மூலம், டில்லி எய்ம்ஸ் ஆஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இதய சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இதய பாதிப்புக்காக சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்த தன்கர், தற்போது மயங்கி விழுந்து ஆஸ்பிடலில் அட்மிட் ஆகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும், தன்கரின் அட்மிட், அவரின் சிகிச்சை விவரங்கள் குறித்து, எய்ம்ஸ் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

நவ 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி