உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தன்கர் ராஜினாமா பின்னால் இருக்கும் 3 காரணங்கள் | Jagdeep Dhankhar | Vice president | Resigned | Niti

தன்கர் ராஜினாமா பின்னால் இருக்கும் 3 காரணங்கள் | Jagdeep Dhankhar | Vice president | Resigned | Niti

அடுத்த துணை ஜனாதிபதி யார்? பட்டியலில் இவர் தான் டாப் பாஜ முடிவுக்கு இதுதான் காரணம் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உடல் நலத்தை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். சரியாக 13 நாட்களுக்கு முன், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை நிகழ்ச்சியில் பேசிய தன்கர், 2027 ஆகஸ்ட் வரை பதவியில் தொடர்வேன் என கூறியிருந்தார். ஆனால் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அந்த முடிவில் இருந்து பின்வாங்கி ராஜினாமா செய்தது டில்லி அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன்கருக்கு இதய நோய் இருப்பது உண்மைதான் என்றாலும், திடீரென மனம் மாறியதற்கு 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதல் காரணம் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை அடுத்த துணை ஜனாதிபதியாக பதவியில் அமரவைக்க பாஜ காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டசபை தேர்தல் வருவதால், பாஜ வேட்பாளரை முதல்வராக்க அக்கட்சி நினைக்கிறது. இதனால் நிதிஷ்குமார் உடனான உறவை தக்கவைக்க அவரை துணை ஜனாதிபதி பதவியில் அமர வைத்து அழகு பார்க்க பாஜ திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது. பாஜ எம்எல்ஏ ஹரி பூஷண் தாகூரின் பேட்டியும் அதை உறுதிபடுத்துவதுபோல் அமைந்திருக்கிறது. நிதிஷ்குமார் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் பீகாருக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என பேசியது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி இருக்கிறது. இரண்டாவதாக திங்களன்று நடந்த ராஜ்யசபா அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்காமல் தன்கரை அவமதித்தது அடுத்த காரணமாக கூறப்படுகிறது.

ஜூலை 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி