ஜெய்சங்கரை தாக்க ஓடிவந்த காலிஸ்தான் ஆதரவாளன் Jaishankar london visit | Khalistani extremists video
நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 7 நாள் பயணமாக பிரிட்டன், அயர்லாந்து நாடுகளுக்கு சென்றுள்ளார். பிரிட்டன் அரசாங்கத்துடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு வெளியே வந்த போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவரை தாக்க முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லண்டனில் உள்ள Chatham ஹவுசில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமியை ஜெய்சங்கர் சந்தித்தார். இந்தியா, பிரிட்டன் இடையேயான நட்புறவு, பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள், வர்த்தகம் தொடர்பான விவகாரங்களை விவாதித்தனர். ஒரு அணியில் நின்று பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை முடிந்து Chatham ஹவுசை விட்டு ஜெய்சங்கர் வெளியே வந்தார். அப்போது ஏற்கனவே அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டு இருந்தனர்.