உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி காளை வளர்ப்போர் கேள்வி! Jallikattu | DMK | Election Manifesto

திமுக தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி காளை வளர்ப்போர் கேள்வி! Jallikattu | DMK | Election Manifesto

கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க. தேர்தல் அறிக்கையில், 373வது அறிக்கையாக, தமிழகத்தின் வீரம், பண்பாடு, கலாசாரத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவருக்கு, ஊக்கத் தொகையாக, மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. கடந்த 2023ல், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், ஜல்லிக்கட்டு காளை குறித்து, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. காளை இனம், உரிமையாளர் விவரங்கள் குறித்து பதிவு செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான அரசாணை, அதே ஆண்டில் வெளியிடப்படும் என, எதிர்பார்த்த நிலையில், இதுநாள் வரை அறிவிப்பு வெளியாகவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்த, இத்திட்டம் நடைமுறைப்படுத்தாமல் உள்ளதால், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் விரக்தியில் உள்ளனர். இதுகுறித்து காளை உரிமையாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில், 19 மாவட்டங்களில், 352 இடங்களில், ஜல்லிக்கட்டு, எருது விடுதல், மஞ்சுவிரட்டு விழா நடத்தப்படுகிறது. 2024-25ல் 214 இடங்களில் இவ்விழா நடந்துள்ளது. ஆண்டுதோறும் 26,000 காளைகள் பங்கேற்கின்றன. பூர்வீக காளை இனங்களான, காங்கேயம், உம்பளச்சேரி, ஆலம்பாடி, பர்கூர், புலிகுளம் போன்ற காளைகள், ஜல்லிக்கட்டில் பங்கேற்கிறது. தமிழக அளவில் சுமாற் 1.14 லட்சம் காளைகள் உள்ளன. தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, மாதம், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் இதுநாள் வரை, அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை. வரும் ஜனவரி மாதம் பொங்கல் விழாவில், ஜல்லிக்கட்டு துவங்கும் நிலையில், தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என காளை உரிமையாளர்கள் வலியுறுத்தினர். #Jallikattu #DMK #ElectionManifesto #RS1000 #TamilNadu #CulturalHeritage #TraditionalSports #PoliticalCampaign #GrassrootsMovements #SupportLocalTraditions #InstaPolitics #VoteForChange #PublicSymbols #CommunityEngagement #CivicParticipation #DemocracyInAction #HeritagePreservation #StatePolitics

அக் 21, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
அக் 23, 2025 05:42

பெண்களின் அதிகாரம் பேசும் நாடு இலவசங்களுக்கு அவர்களை அடிமைகளாக்கி வீட்டிற்கு வெளியில் வரவைத்து அரசியல்வாதிகளின் பெண்களை மட்டும் வீட்டிற்குள்ளே வைத்து விட்டு மக்களில் பல படித்த ஆண் காளைகளை வீட்டிற்குள் அடைத்துள்ளனர். வேலையே இல்லாமல் இருக்கும்போது மிருக காளைகளுக்கு மட்டும் பணமா சாமி


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ