/ தினமலர் டிவி
/ பொது
/ ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த அனைவரையும் ரிலீஸ் செய்யணும் jallikattu Protest | Jallikattu Case
ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த அனைவரையும் ரிலீஸ் செய்யணும் jallikattu Protest | Jallikattu Case
2017 ல் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து மதுரை, அலங்காநல்லூரிலும் தடையை மீறி போராட்டம் நடந்தது. அவர்களில் 64 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்ட 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 9 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு அளித்தார். 64 பேரில் 3 பேர் காலமாகிவிட்ட நிலையில் 59 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சிய 2 பேர் மீதான வழக்கு தனியே நடக்கிறது.
ஜன 29, 2026