உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மீனம்பட்டி ஜல்லிக்கட்டில் நடந்த எதிர்பாராத சம்பவம் | Jallikattu | Bull hits spectator | 1 died | Pud

மீனம்பட்டி ஜல்லிக்கட்டில் நடந்த எதிர்பாராத சம்பவம் | Jallikattu | Bull hits spectator | 1 died | Pud

புதுக்கோட்டை மாவட்டம் மீனம்பட்டியில் முனியாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்ற காளைகளை வீரர்கள் உற்சாகமாக அடக்கி பரிசுகளை அள்ளினர். வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளை ஒன்று, வீரர்களிடம் பிடிபடாமல் ஆவேசமாக கலெக்ஷன் பாயின்ட் பகுதியை கடந்து சென்றது. அப்போது அந்த இடத்தில் நின்றிருந்த பொற்பனைக்கோட்டையை சேர்ந்த காளை உரிமையாளர்களில் ஒருவரான 23 வயது மாரிமுத்துவை மார்பில் குத்தி தூக்கியது. இதில் படுகாயமடைந்த மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். 23 வயதில் இறந்த மாரிமுத்துவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். (பிரத்) காளை முட்டி இளைஞர் இறந்த சம்பவம் குறித்து மழையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஏப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !