பாக் நரித்தனத்திற்கு சம்மட்டி அடி: ஐநாவில் கிழித்தெறிந்த இந்தியா | Jammu Kashmir | Pakistan UNGA Re
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்தது. அதில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், வழக்கம் போல விவாதத்திற்கு சம்மந்தமில்லாமல் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச மேடையில் கொண்டு வர முயன்றார். இதற்கு இந்தியாவின் ஐநா தூதர் பார்வதனேனி ஹரிஷ் உடனடியாகப் பதிலடி கொடுத்தார். எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தானின் பங்கைப் பற்றிப் பகிரங்கமாக உலக நாடுகளுக்கு முன்னிலையில் தோலுரித்துக் காட்டினார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் தலையிடவோ அல்லது கருத்துச் சொல்லவோ பாகிஸ்தானுக்கு எந்தவிதமான சட்டப்பூர்வ உரிமையும் இல்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் பதவி என்பது உலக அமைதிக்கான ஒரு மிகப் பெரிய பொறுப்பாகும். #UnitedNations #JammuKashmir #IndiaSlamsPak #UNGA #DinamalarNews #IndianDiplomacy #RightOfReply #KashmirIssue #GlobalPolitics #InternationalRelations #BreakingNewsIndia #Dinamalar #NewDelhiResponse #LatestNewsTamil