வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உருக்கெல்லாம் குறி சொல்லுமாம் கவுளி அது போய் விழுமாம் கழனி பானையிலே
காலை வாரும் வேட்பாளர்கள்: அதிர்ச்சியில் பிரசாந்த் கிஷோர்Jan suraj|candidates|bihar election
பீகாரில் முதல் கட்ட தேர்தல் இன்று முடிந்தது. வரும் நவம்பர் 11ல் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. ஆட்சியை பிடிப்பது யார்? என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி, இண்டி கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் வியூக வல்லுநராக இருந்து ஜன் சுராஜ் கட்சியைத் துவக்கிய பிரசாந்த் கிஷோர் 116 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கினார். அவர்களில் கோபால்கஞ்ச் தொகுதி வேட்பாளர் டாக்டர் சசி சேகர் சின்ஹா, பிரஹம்பூர் தொகுதி வேட்பாளர் டாக்டர் சத்ய பிரகாஷ் திவாரி, தானாபூர் வேட்பாளர் அகிலேஷ் குமார் ஆகியோர் கடந்த மாதம் அக்கட்சியில் இருந்து விலகினர். வேட்பு மனுக்களையும் வாபஸ் பெற்றனர். மூவரும் பாஜவுக்கு ஆதரவாக செயல்பட துவங்கினர். பாரதிய ஜனதாவின் அச்சுறுத்தல்தான் இதற்கு காரணம் என பிரசாந்த் கிஷோர் சொன்னார். இந்நிலையில் தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாளான நேற்று முங்கர் தொகுதி வேட்பாளர் சஞ்சய் சிங், ஜன்சுராஜ் கட்சியில் இருந்து விலகினார். அந்த தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் குமார் பிரனாய்க்கு Kumar Pranay ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.
உருக்கெல்லாம் குறி சொல்லுமாம் கவுளி அது போய் விழுமாம் கழனி பானையிலே