உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விதிகளை மீறியதாக எடிட்டர் மீது நடவடிக்கை | Jananayagan | Jananayagan leak | Editor Suspended

விதிகளை மீறியதாக எடிட்டர் மீது நடவடிக்கை | Jananayagan | Jananayagan leak | Editor Suspended

அரசியலில் குதித்துள்ள விஜயின் கடைசி திரைப்படம் ஜனநாயகன் என கூறப்பட்டது. இது மட்டுமல்லாமல் தேர்தல் நேரத்தில் விஜய் அரசியல் பேசும் படம் என்பதாலும் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியது. ஜனவரி 9ல் ரிலீஸ் என அறிவித்தனர். தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் டேட் தள்ளி போனது. இது தவிர கரூர் வழக்கு சிபிஐ விசாரணையிலும் சிக்கி விஜய் திண்டாடினார். இந்த சூழலில் ஏப்ரல் 3ம் தேதி ஜனநாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் புகாரில் அசோக் நகர் போலீசார் விசாரிக்கின்றனர். ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ப்ரீலேன்சர் அசிஸ்டண்ட் விஷ்வல் எடிட்டர் உமா சங்கர் மூலமாக ஜனநாயகன் சமூக வலைதளங்களில் கசிந்தது தெரிய வந்தது. வழக்கு தொடர்பாக முன்ஜாமின் வழங்க வேண்டும் உமா சங்கர் ஐகோர்ட்டில் மனு செய்தார். படம் இணையத்தில் வெளியானதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்பாவியான தன்னை வழக்கில் சேர்த்துள்ளனர் என கூறி உள்ளார். இந்த சூழலில் எடிட்டர் யூனியனில் இருந்து அப்படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சங்க விதிகளுக்கு மாறாக நடந்ததாலும், கவனக்குறைவாக இருந்ததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாக தென்னிந்திய சினிமா எடிட்டர் சங்கம் தெரிவித்துள்ளது. #Jananayagan | #Jananayaganleak | #EditorSuspended | #Cinema | #Vijay | #JananayaganUpdate | #EditorsUnion

ஏப் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி