உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்! Jananayagan | Vijay Film | CBFC | High Court | Chennai

தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்! Jananayagan | Vijay Film | CBFC | High Court | Chennai

அரசியல் கட்சி துவங்கி இருக்கும் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் போர்டு தணிக்கைச்சான்று வழங்கவில்லை. மத உணர்வுகளை புண் படுத்தும் வகையிலும், இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களும் இடம் பெற்று இருப்பதாக கூறி, போர்டு உறுப்பினர் புகார் அளித்ததால், சான்று வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. படத்தை 9 பேர் கொண்ட மறு ஆய்வுக் குழுவுக்கு சென்சார் போர்டு தலைவர் அனுப்பி வைத்தார். இதை ஏற்காத பட தயாரிப்பு நிறுவனம், தணிக்கைச்சான்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. விசாரித்த தனி நீதிபதி ஆஷா, தணிக்கைச்சான்று வழங்கவும், மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்சார் போர்டு தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் ரிட் அப்பீல் தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் வழக்கை விசாரித்தது. இரு தரப்பினரும், தங்கள் வாதங்களை முன் வைத்தனர். இதை கேட்ட நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர். தணிக்கை சான்று வழங்க கூறிய தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்தும், சென்சார் போர்டு மேல் முறையீட்டை ஏற்றும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். சென்சார் போர்டு பதில் மனு தாக்கல் செய்ய, தனி நீதிபதி அவகாசம் அளித்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர். மீண்டும் தனி நீதிபதி வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். படத்தின் தயாரிப்பாளர், தன் முறையீட்டு விண்ணப்பத்தில் திருத்தம் செய்து கொள்வதற்கும் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர். இதனால் படம் வெளியாவதில் சிக்கல் தொடர்வதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். #Jananayagan #VijayFilm #CBFC #HighCourt #Chennai #TamilCinema #FilmyPassion #VijayFans #CinemaLovers #IndianFilmIndustry #FilmReleases #Censorship #ChennaiFilmScene #Bollywood #Tollywood #SouthIndianCinema #MovieUpdates #FilmCritics #EntertainmentNews

ஜன 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !