உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 238 இடங்களில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சிக்கு முட்டை jansuraaj|prasanth kishore|Election Result

238 இடங்களில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சிக்கு முட்டை jansuraaj|prasanth kishore|Election Result

243 தொகுதிகள் கொண்ட பீகாரில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. பாஜ, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகாகட்பந்தன் கூட்டணிக்கும் கடுமையான போட்டி இருக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறின. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 3 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் தனித்து களம் கண்டது. பீகார் முழுதும் 3 ஆயிரம் கிலோ மீட்டர் பேரணி சென்று பிரசாரம் செய்த பிரசாந்த் கிஷோருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. அவரது பிரசாரத்திற்கு கூடிய கூட்டத்தை பார்த்து பீகார் அரசியல் களத்தில் மாற்றம் ஏற்படலாம். ஜன் சுராஜ் கட்சி ரிசல்ட்டில்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்பட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட ஜன் சுராஜ் கட்சி முன்னிலை பெறவில்லை. பிரசாந்த் கிஷோரின் கட்சிக்கு 2 முதல் 4 இடங்கள் கிடைக்கும் என சில கருத்து கணிப்புகள் கூறின.

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ