ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகனும் தொழில் அதிபருமான ஜெய் ஷா பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக உள்ளார் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைராகவும் பொறுப்பு வகிக்கிறார் ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வாகியுள்ளார் ஐசிசி தலைவர் கிரேக் பார்க்லேவின் பதவிக் காலம் நவம்பருடன் நிறைவடைகிறது புதிய தலைவராக ஜெய் ஷா டிசம்பரில் பொறுப்பேற்கிறார் 2 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்
ஆக 27, 2024