உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரார்த்தனையின் பின்னணியில் ஒரு பெண்: யார் அவர்? | JD Vance Republican Party nominee vice president

பிரார்த்தனையின் பின்னணியில் ஒரு பெண்: யார் அவர்? | JD Vance Republican Party nominee vice president

வேன்ஸ் வெற்றிக்காக பிரார்த்திக்கும் கிராமம் அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக ஜே.டி.வேன்ஸ் போட்டியிடுகிறார். துணை அதிபராக வேன்ஸ் வெற்றி பெற வேண்டும் என ஒரு ஆந்திர கிராமமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. அந்த ஊரின் பெயர் வட்லூரு கிராமம். இந்த ஊரில் உள்ள சாய்பாபா கோயிலில் பூசாரி சுப்பிரமணிய சர்மா வேன்ஸ் வெற்றிக்காக தினமும் பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார். எதற்காக ஆந்திர கிராமம் வேன்ஸ் வெற்றிக்காக வேண்டுகிறது தெரியுமா? வேன்சின் மனைவி உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். உஷா அமெரிக்காவில் பிறந்தாலும், அவரது மூதாதையர் வாழ்ந்த பூர்வீக கிராமம்தான் இந்த வட்லூரு. உஷாவின் தாத்தா பாட்டி இந்த கிராமத்தில் படித்தவர்கள். கல்வியில் உயர்ந்தவர்களாகவும், ஹிந்து வேதங்களை நன்கு அறிந்தவர்களாகவும் உஷாவின் தாத்தா பாட்டி ஊராரால் மதிக்கப்பட்டார்கள்.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை