உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இரட்டை இன்ஜின் ஆட்சி அமைந்தால் வளர்ச்சி இரு மடங்காகும் jharkhand | Assembly Elections | PM Modi | C

இரட்டை இன்ஜின் ஆட்சி அமைந்தால் வளர்ச்சி இரு மடங்காகும் jharkhand | Assembly Elections | PM Modi | C

ஜார்கண்டிலும் இப்போது தேர்தல் நடக்க உள்ளது. நேற்று பாஜ சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த மாநிலத்தில் விவசாயிகளுக்காக, தொழில்களை வலுப்படுத்த சிறந்த வசதிகள் தேவைப்படுகிறது. அதற்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு முட்டுக்கட்டை போட்ட போதிலும், மத்திய அரசு சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாடு பயணிக்கும் நேரத்தில் ஜார்கண்டில் தேர்தல் நடக்கிறது. இரட்டை இஞ்சின் அரசை மக்கள் அமைத்துத் தந்தால், வளர்ச்சியும் இரண்டு மடங்கு வேகத்தில் நடைபெறும். ஜார்கண்ட் மாநில அரசு கொண்டு வந்த வீடு கட்டும் திட்டம் என்ன ஆனது என்று ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசிடம் மக்கள் கேட்க வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலின்போது நாடு முழுவதும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தருவோம் என நான் உறுதி அளித்தேன்.

நவ 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை