உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரே பிரேமில் ஜின்பிங், புடின், கிம்ஜாங்... அலறும் US | china parade | jinping putin kimjong vs trump

ஒரே பிரேமில் ஜின்பிங், புடின், கிம்ஜாங்... அலறும் US | china parade | jinping putin kimjong vs trump

2ம் உலக போரின் 80வது ஆண்டு நிறைவை வெற்றி தினமாக சீனா கொண்டாடுகிறது. இதற்காக வெற்றி தின அணிவகுப்பு என்ற பெயரில் மிகப்பெரிய அணிவகுப்பை இன்று சீனாவில் நடத்தியது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக சென்ற ரஷ்ய அதிபர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் உட்பட பல தலைவர்கள் பங்கேற்றனர். இதற்காக வடகொரியாவில் இருந்து அதிபர் கிம்ஜாங் உன்னும் வந்தார். அணிவகுப்பு நடந்த தியனன்மென் சதுக்கத்துக்கு சீன அதிபர் ஜின்பிங், புடின், கிம்ஜாங் உன் ஒன்றாக சேர்ந்து வந்தனர். அணிவகுப்பின் போது ஏவுகணைகள், போர் விமானங்கள், பல நவீன ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பல ஆயுதங்களை முதல் முறையாக சீனா வெளி உலகத்துக்கு காட்டியது. நிகழ்ச்சியின் போது பேசிய அதிபர் ஜின்பிங், சீனாவின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று ஆவேசமாக கூறினார். உலகையை திரும்பி பார்க்க வைத்த இந்த அணிவகுப்பு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை மணியை அடித்து இருக்கிறது. ஒரே இடத்தில் புடின், ஜின்பிங், கிம்ஜாங் உன் கைகோர்த்தது அமெரிக்காவை பதைபதைக்க வைத்திருக்கிறது. மூன்று தலைவர்களும் ஒன்றாக இருக்கும் போட்டோவும் வெளியான நிலையில், அதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ரியாக்ஷன் கொடுத்துள்ளார். ஜின்பிங், புடின், கிம்ஜாங் உன் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்வதாக அதிர்ச்சி கிளப்பினார். அவர் கூறியது: சீனா மீது நடந்த படையெடுப்பின் போது, அந்த நாட்டின் எதிரிகளை வெளியேற்ற அமெரிக்கா மகத்தான ஆதரவு அளித்தது. இதற்காக அமெரிக்க வீரர்களும் ரத்தம் சிந்தினர். இதை எல்லாம் சீன அதிபர் குறிப்பிடுவாரா இல்லையா என்பது தான் என் கேள்வி. சீன மக்களுக்கு இது ஒரு கொண்டாட்டமான நாள். இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் அதே நேரத்தில் அமெரிக்க வீரர்களின் துணிச்சல், தியாகம் நினைவுகூரப்படும். புடின், கிம் ஜாங் உன்னுடன் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்கிறீர்கள். உங்களுக்கு எனது வணக்கங்கள் என்று டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் சீனாவில் ஜின்பிங், புடின், கிம்ஜாங் உன் ஓரணியில் திரண்டு இருப்பது டிரம்புக்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பது தெளிவாக தெரிவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதே டிரம்ப் அணிவகுப்பு நடப்பதற்கு சில நாட்கள் முன்பு வீராவேசமாக பேசினார். சீனாவில் நடக்கப்போகும் அணிவகுப்பு பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. உலகிலேயே வலிமையான ராணுவம் எங்களிடம் உள்ளது. எனவே அவர்கள் ஒருபோதும் தங்கள் ராணுவத்தை அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்தமாட்டார்கள் என்று சீனா, ரஷ்யா, வடகொரியாவை சுட்டிக்காட்டி பேசினார். #ChinVsAmerica #TrumpVsXi #JinPing #Putin #KimJongUn #USInfluence #GeopoliticalDebate #WorldLeaders #InternationalRelations #PoliticalTension #ChinaVsUS #GlobalPolitics #PowerStruggle #Diplomacy #EastVsWest #TrumpAdministration #LeadershipShowdown #BilateralRelations #StrategicAlliance

செப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி