Gen-Z தலைமுறையினர் சுசிலாவை தேர்வு செய்ய காரணம் என்ன? justice karki interim head nepal| gen z protes
ேபாளத்தில் சோஷியல் மீடியாக்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் கொதித்து எழுந்த ஜென்-ஸீ Gen-Z தலைமுறையினர் நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கினர். பின்னர் அது, ஊழலுக்கு எதிரான போராட்டமாக மாறியது. வன்முறை, கலவரம் உண்டானது. அதிபர் ராமசந்திர பவுடேல், பிரதமர் சர்மா ஒலி பதவி உள்ளிட்டோர் பதவி விலகினர். அதிகாரம் ராணுவ கட்டுப்பாட்டு சென்றது. சோஷியல் மீடியாக்களுக்கான தடை திரும்ப பெறப்பட்டது. போராட்டம் தணிந்துவரும் நிலையில், இடைக்கால அரசுக்கு தலைமை ஏற்பவரை ஜென்-ஸி தலைமுறையினர் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஆன்லைன் ஆலோசனையில் தேர்வு செய்தனர். இதில், போராட்டத்தை ஒருங்கிணைத்த காத்மாண்டு மேயர் பாலென் ஷாவைவிட முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கிக்கு அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நேபாள இடைக்கால அரசின் பிரதமராக 73 வயதான சுசிலா கார்கி நியமிக்கப்படுவார் எனத்தெரிகிறது. நேபாளத்தின் பிராட்நகரில் 1952ல் சுசிலா கார்கி பிறந்தார் இந்தியாவின் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படித்தார். பின் நேபாளத்தின் திரிபுவன் பல்கலையில் சட்டம் படித்தார். 1979ல் வக்கீலாக பணியாற்ற தொடங்கிய அவர், படிப்படியாக உயர்ந்து 2009ல் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார். 2016ல் நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆனார். ஓராண்டு அந்த பதவியில் இருந்தார். ஊழலுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார். ஆனால், பாரபட்சமான தீர்ப்புகளை வழங்கியதாகவும், நீதித்துறை அதிகார வரம்பை மீறியதாகவும் குற்றம்சாட்டி சுசிலாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. விதிமுறையை மீறி காவல்துறை தலைவரை நியமித்ததாக கூறி அதை ரத்து செய்து தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதையடுத்து விசாரணைக்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், அவருக்கு எதிரான தீர்மானத்துக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பாலின சமத்துவம் புத்தம் எழுதி அதற்காக விருதும் பெற்று இருக்கிறார். ஊழலுக்கு எதிரான சுசிலா கார்கியின் அணுகுமுறையே அவரை நேபாளத்தை வழிநடத்தும் தலைமைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. #Nepal #GenZ #SushilaKarki #ChiefJustice #InterimLeader #NepalPolitics #JusticeForNepal #WomenLeadership #SocialChange #NepalYouth #KarkiForJustice