உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பதவி விலக கெடு விதித்த எம்பிக்கள்

பதவி விலக கெடு விதித்த எம்பிக்கள்

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்தாண்டு சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. அந்நாட்டில் உள்ள நமது தூதர்களை மத்திய அரசு திரும்ப பெற்றது. அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவுடனான உறவை ட்ரூடோ சிதைத்து விட்டதாக இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அவரது சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவரது லிபரல் கட்சியின் எம்பிக்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் ஒவ்வொருவரும் பேச அவகாசம் தரப்பட்டது. அதை பயன்படுத்தி பல எம்பிக்கள் ட்ரூடோ மீதான அதிருப்தி, குறைகளை வெளிப்படையாக கூறினர். ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி 24 எம்பிக்கள் கையெழுத்திட்ட கடிதமும் கொடுக்கப்பட்டது. வரும் 28 ம் தேதிக்குள் அவர் பதவி விலக கெடு விதித்தனர். ஆனால், ராஜினாமா செய்யாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றி சொல்லவில்லை. கனடாவில் விலைவாசி உயர்வு, சர்வதேச சிக்கல் உள்ளிட்ட பல காரணங்களால் ஆளும் லிபரல் கட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. அடுத்த முறை தேர்தலில் ஜெயிப்பதற்கான வாய்ப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பிரதமர் ட்ரூடோ பதவி விலகினால் அந்த அதிருப்தி குறையும் என எம்பிக்கள் நினைக்கிறார்கள். அதன் வெளிப்பாடாகவே ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அக் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை