உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆதாரமே இல்லை என அந்தர் பல்டி: திடுக் பின்னணி | Justin Trudeau | Canada India

ஆதாரமே இல்லை என அந்தர் பல்டி: திடுக் பின்னணி | Justin Trudeau | Canada India

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என கேட்டு காலிஸ்தான் உட்பட சில பிரிவினைவாத இயக்கங்கள் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகின்றன. வட அமெரிக்க நாடான கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால் இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. கனடாவில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் நிஜ்ஜார் கொலை வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ளார் ட்ரூடோ. கனடா தேர்தல் மற்றும் ஜனநாயகத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருப்பதாக இந்தியா மீது குற்றஞ்சாட்டினார். இதையடுத்து டில்லியில் உள்ள கனடா துாதரக அதிகாரிகள் ஆறு பேரை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இந்த விவகாரம் முடிவுக்கு வரும் வரை கனடாவுக்கான இந்திய துாதரையும் திரும்ப பெற்றது.

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை