சுப்ரீம் கோர்ட்டில் திமுக முக்கிய வழக்கு | Kalaignar University Bill | cm stalin vs governor ravi
திருச்சி பாரதிதாசன் பல்கலையை பிரித்து புதிதாக கும்பகோணத்தில் கலைஞர் பல்கலையை உருவாக்கும் சட்ட மசோதா, கடந்த ஏப்ரல் 29ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில், கலைஞர் பல்கலை வேந்தராக தமிழக முதல்வரும், இணை வேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சரும் இருப்பர். வேந்தரின் முன் அனுமதியின்றி பட்டங்கள் வழங்க முடியாது. தேடல் குழு தேர்வு செய்யும் மூவர் பட்டியலில் இருந்து துணை வேந்தரை, வேந்தர் நியமிப்பார் என்று கூறப்பட்டிருந்தது. துணை வேந்தர் தேடல் குழுவில், வேந்தரின் பிரதிநிதியாக சுப்ரீம் கோர்ட் அல்லது ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி, அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதன்மை செயலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி, சிண்டிகேட் பிரதிநிதியாக, மாநில அல்லது மத்திய பல்கலை துணை வேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம் பெறுவர் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தது. கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட இந்த மசோதாவை, கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர் ரவி. இதனால் அதிருப்தி அடைந்த திமுக அரசு, கவர்னரின் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கலைஞர் பல்கலை சட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியது, சட்டசபை முடிவுக்கு எதிரானது. இதில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு, உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரி இருக்கிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை கவர்னர் ரவி நிலுவையில் வைத்திருந்தார். தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கும் சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் வழங்கியது. இதுதொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் தொடர்பான வழக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் கலைஞர் பல்கலை மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னரின் முடிவை எதிர்த்து, தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. #KalaignarUniversityBill #DMKGovtVsGovernor #DMKVsPresident #TamilNaduPolitics #PoliticalDebate #GovernanceIssues #Raj Bhavan #ChiefMinisterStalin #StateGovernance #LegislativeAffairs #TamilNaduNews #PoliticalConflict #GovernorRavi #DMKLeadership #ConstitutionalAuthority #PoliticalChange #DMKUpdates #PublicPolicy #CivicEngagement