அரங்குகளை திறந்து வைத்து பரதம் ரசித்த அமைச்சர் செகாவத் | Kalakshetra | Chennai
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்திரா பவுண்டேஷன் செயல்படுகிறது. இங்கு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 2 நடன அரங்குகள் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், அரங்கங்களை மாணவர்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். breath கலாஷேத்ராவின் செயல்பாடுகள் பற்றி நிர்வாகிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தொடர்ந்து பி.கே.எ. ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனங்களை கண்டு ரசித்தார். breath கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை செயலாளர் கோவிந்த் மோகன், துணை செயலாளர்கள் உமா நந்தூரி, அமிதா பிரசாத் சார்பாய், கலாஷேத்ரா இயக்குநர் சுரேஷ்குமார் சிக்கலா மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பரதநாட்டியம் மற்றும் இசையை வளர்க்கும் பொருட்டு, 1936ல் கலாஷேத்ராவை ருக்மிணிதேவி அருண்டேல் தொடங்கினார். இது ஒரு கவின் கலை கல்லூரி. ஒரு மாணவியுடன் தெடங்கப்பட்ட இக்கல்லூரியில் இன்று பல நாடுகளை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் தங்கியிருந்து நடன கலையை கற்று வருகின்றனர்.