கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷுக்கு கோர்ட் காவல் Kallakurichi | Arul Vignesh | MLA Arrested
மூத்த பெண் அதிகாரிக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி நவம்பர் 23ஆம் தேதி கள்ளக்குறிச்சி எஸ்பியிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அருள் விக்னேஷ் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, திருப்பூர் எஸ்பி ஸ்ரிஷ்டி சிங், ஐஜி காமினி விசாரணை நடத்தினர். புகார் அளித்த பெண் அதிகாரி, வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடம் விசாரணை மற்றும் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. இந்நிலையில், நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷின் வீட்டுக்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர், அவரை தியாகதுருகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், சாட்சிகள் கொடுத்த வாக்குமூலம் பற்றி அருள் விக்னேஷிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அரசு ஆஸ்பிட்டலுக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். 45 நிமிடங்கள் நடந்த மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு, போலீசார் அவரை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர். நள்ளிரவில் கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிபதி பானுமதி முன் எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு தொடர்பான விசாரணை, கைது நடவடிக்கைகள் குறித்த விவரங்களை நீதிபதியிடம் போலீசார் தெரிவித்தனர். அருள் விக்னேஷை டிசம்பர் 11ம் தேதி வரை 14 நாட்கள் கோர்ட் காவலில் வைக்க நீதிபதி பானுமதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். #ArulVignesh #TVK #Kallakurichi #MLAArrested #CuddalorePrison #TamilNaduPolitics #BreakingNews #DinamalarNews