உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்த மாதிரி போலீசுக்கு சஸ்பெண்ட் எல்லாம் பத்தாது | Kallakurichi | SSI Compulsory Retirement | DIG

இந்த மாதிரி போலீசுக்கு சஸ்பெண்ட் எல்லாம் பத்தாது | Kallakurichi | SSI Compulsory Retirement | DIG

விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். வயது 54. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கரியலூர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு தனிப்பிரிவு காவலராக பணியாற்றினார். அப்போது, அங்கு போலி மதுபான ஆலை நடத்திய கோட்டப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அப்போதைய கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி மோகன்ராஜ், ராமலிங்கத்தை 2 மாதம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 2 மாதங்கள் முடிந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் துறை பட்டில் சிறப்பு உதவி ஆய்வாளராக ராமலிங்கம் பணியை தொடர்ந்தார்.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ