/ தினமலர் டிவி
/ பொது
/ தப்பியோட முயன்ற போதை பாய்ஸ்: விரட்டி பிடித்த போலீஸ் Kallakurichi drugs| TN man fights with police
தப்பியோட முயன்ற போதை பாய்ஸ்: விரட்டி பிடித்த போலீஸ் Kallakurichi drugs| TN man fights with police
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தனர். அந்த வழியாக பைக்கில் வந்த 3 இளைஞர்களை போலீசார் நிறுத்தி விசாரித்தபோது, அவர்கள், மதுமற்றும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். பைக்கை ஓரம் கட்டவைத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்தபோது, இளைஞர்கள் அவர்களுடன் தகராறு செய்தனர். பைக்கில் ஏறி தப்பிக்க முயன்றனர். சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் அவர்களை விரட்டிசென்று மடக்கினார். போதை இளைஞர்கள் போலீசுடன் மீண்டும் தகராறு செய்தனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆக 04, 2024