/ தினமலர் டிவி
/ பொது
/ ஜிப்மரில் சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் மரணம்|Kallakurichi illicit liquor case |Jipmer | Puducherry
ஜிப்மரில் சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் மரணம்|Kallakurichi illicit liquor case |Jipmer | Puducherry
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் ஜூன் 18 அன்று, கள்ளச்சாராயம் குடித்த 200க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதித்து ஆஸ்பிடல்களில் சேர்க்கப்பட்டனர். விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மற்றும் தனியார் ஆஸ்பிடல்களில் சிகிச்சை பெற்றவர்களில் அடுத்தடுத்து 65 பேர் இறந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி போலீசர் விசாரிக்கின்றனர். கள்ளச்சாராயம் விற்றதாக கைதான சின்னதுரை, ராமர், ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 23 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஜூலை 10, 2024