ஊருக்கு ஒதுக்குபுறம் வீடு எடுத்து மிருக செயல்: மீட்கப்பட்ட கர்ப்பிணிகள் | gender reveal | Kallakuric
தமிழகத்தின் வட மாவட்டங்களில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதனை கலைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கடலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூரில் இயங்கும் சட்டவிரோத ஸ்கேன் மையங்கள் மூலம் இது நடக்கிறது. சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகள் இங்கே அனுப்பப்படுவது சுகாதாரத் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்பாங்குறிச்சியில் கருவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவிக்கும் கும்பல் உள்ளதாக சேலம் மாவட்ட சுகாதார துறைக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் செம்பாங்குறிச்சி பகுதியில் ரகசியமாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து கருவின் பாலினத்தைத் தெரிவித்தது கண்டறியப்பட்டது. இங்கு சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து வந்த 8 கர்ப்பிணிகளுக்குக் கருவின் பாலினத்தைக் கண்டறிய தலா.25,000 வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. அந்த வீட்டிலிருந்த ஸ்கேன் மிஷன், பணத்தைப் பறிமுதல் செய்த சுகாதாரத்துறையினர், கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்த மணிவண்ணன் என்பவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.