உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காண கூடாததை கண்ட கணவன்: கள்ளக்குறிச்சியில் பகீர் சம்பவம் | Kallakurichi | Crime

காண கூடாததை கண்ட கணவன்: கள்ளக்குறிச்சியில் பகீர் சம்பவம் | Kallakurichi | Crime

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலத்தை சேர்ந்தவர் கொளஞ்சி, வயது 60. கூலி தொழிலாளி. இவரது முதல் மனைவி காளியம்மாள். தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் காளியம்மாள் கணவரை பிரிந்து சென்றார். இதையடுத்து கொளஞ்சி லட்சுமி என்பவரை கொளஞ்சி 2வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்ற இரு மகள்களும் படிக்கின்றனர். இந்த நிலையில் கொளஞ்சி வீட்டு மொட்டை மாடியில் லட்சுமியும், 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் முண்டமாக கிடந்தனர். இருவரின் தலையும் காணவில்லை. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவம் நடந்த ஸ்பாட்டுக்கு வந்தனர். இறந்து கிடந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு விசாரணை தொடங்கினர். அப்போது ஆண் சடலம் அருகில் ஒரு செல்போன் இருந்தது. அதனை ஆய்வு செய்தபோது இறந்து கிடந்த ஆண் அதே பகுதியை சேர்ந்த தங்கராசு, வயது 57 என்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் இரட்டைக் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியானது. தங்கராசுக்கும், லட்சுமிக்கும் இடையே ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. நாளடைவில் திருமணம் தாண்டிய உறவானது. அவ்வப்போது கொளஞ்சி வேலை காரணமாக வெளியூர் சென்று விடுவதாக கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட லட்சுமியும், தங்கராசும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.

செப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை