காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி கணேச சர்மா டிராவிட் | KanchiMatham
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 2018 ல் முக்தி அடைந்ததை அடுத்து, இளைய மடாதிபதியாக இருந்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 70வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார். அதன் பின் 7 ஆண்டுகளாக இளைய மடாதிபதி தேர்வு செய்யப்படாமல் இருந்தது. தற்போது ஆந்திராவை சேர்ந்த கணேச சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் 71வது பீடாதிபதியாகவும் இருப்பார். கணேச சர்மா டிராவிட்டுக்கு, பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வரும் 30ம் தேதி அட்சய திரிதியை தினத்தில் சன்யாச தீட்சை வழங்க உள்ளார். காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா திருக்குளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மே 2ம் தேதி காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஆதி சங்கரரின் 2534வது ஆண்டு ஜெயந்தி மகோற்சவத்தை ஒட்டி இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. ரிக், யஜூர், சாம வேதங்கள், உபநிஷதங்கள் உள்ளிட்டவற்றை கற்று தேர்ந்தவர் கணேச சர்மா டிராவிட் .