/ தினமலர் டிவி
/ பொது
/ அரசியல்வாதிகள் மொழி பற்றி பேசுவதற்கு தகுதி அற்றவர்கள் Actor Kamal | Kannada language | Issue |
அரசியல்வாதிகள் மொழி பற்றி பேசுவதற்கு தகுதி அற்றவர்கள் Actor Kamal | Kannada language | Issue |
சென்னையில் சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது என கூறினார். இதற்கு கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. கன்னடத்தை அவமதித்து விட்டதாகவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இச்சூழலில், கேரளா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் இது தொடர்பான விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்தார். தமிழகத்தில் ஒரு மேனன் முதல்வராக இருந்துள்ளார். ஒரு ரெட்டி முதல்வராக இருந்திருக்கிறார். ஒரு கன்னடர் கூட முதல்வராக இருந்துள்ளார். அப்படிப்பட்ட ஒரு மாநிலம்.
மே 28, 2025