கமல்ஹாசனுக்கு தொடரும் பிரச்னை: கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவு Kamal | Thug life Cinema |
நடிகர் கமல்ஹாசன் கடந்த ஏப்ரலில் சென்னையில் நடந்த தக் லைஃப் பட விழாவில் பேசும்போது கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதித்தது. கர்நாடக ஐகோர்ட்டும் படத்துக்கு தடை விதித்தது. தடையை நீக்கி உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கமல் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் படத்துக்கான தடையை ரத்து செய்து உத்தரவிட்டது. இருப்பினும் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிட மாட்டோம் என கமல் அறிவித்தார். படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் இந்த பிரச்னை முடிந்துவிட்டதாகவே எல்லாரும் நினைத்தனர்