தமிழர்களுக்கு உறுதுணையாக இருங்கள்: கமல்ஹாசன் actor kamalhasan| pm modi| keeladi recognition
பிரதமர் மோடியை சந்தித்து கமல்ஹாசன் வைத்த கோரிக்கை டிஸ்க்: தமிழர்களுக்கு உறுதுணையாக இருங்கள்: கமல்ஹாசன் actor kamalhasan| pm modi| keeladi recognition ராஜ்யசபா எம்பியும், மக்கள் நீதி மய்யம் தலைவமான கமல்ஹாசன் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஒரு கலைஞனாகவும், தமிழகத்தின் பிரதிநிதியாகவும், கீழடி தொன்மையை அகீகரிப்பதை விரைவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழின் தொன்மையையும், தமிழ் நாகரிகத்தின் பெருமையையும் உலகிற்கு உரக்க சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் மோடி உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கமல்ஹாசன் எம்பி கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட கமல்ஹாசன், கடந்த மாதம் 25ம் தேதி எம்பியாக பதவியேற்றார். அதன் பின் முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்து இருக்கிறார்.