ஒருவரின் உயிர்போனது: கட்டட தரம் பற்றி கேள்வி kambam new hospital
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை வளகத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. வழக்கம் போல் இன்றும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். போர்ட்டிகோவுக்கு மேல், முதல் தளத்தின் எலிவேஷனுக்காக சுமார் 15 அடி நீளம் முக்கால் அடி அகலத்தில் திட்டு போல் காங்கிரீட் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் மீது நின்றபடி 3 தொழிலளர்கள் சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த எலிவேஷன் திட்டு உடைந்து போர்ட்டிகோ கூரை மீது விழுந்தது.
ஜூலை 08, 2024