உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஞ்சிபுரம் மையப்பகுதியில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு | Kanchipuram | Ekambaranathar temple land

காஞ்சிபுரம் மையப்பகுதியில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு | Kanchipuram | Ekambaranathar temple land

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் மாட வீதியில் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இரட்டை மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை ஒட்டி கோயிலுக்கு சொந்தமான 5 சென்ட் இடம் இருந்தது. இதன் மதிப்பு 2 கோடி. அந்த இடத்தை அப்பகுதியை சேர்ந்த தணிகை வேல் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து வீடு மற்றும் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு வந்துள்ளார். கோயில் நிர்வாகம் சார்பில் இடத்தை மீட்க வழக்கு தொடுத்தனர். விசாரணை முடிவில் கோயில் இடத்தை சுவாதீனம் செய்ய சென்ற மாதம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி