/ தினமலர் டிவி
/ பொது
/ ஸ்டாலின் திறந்த மார்க்கெட்டில் முதல் நாளே விரிசல் | Kanchipuram | Rajaji Market
ஸ்டாலின் திறந்த மார்க்கெட்டில் முதல் நாளே விரிசல் | Kanchipuram | Rajaji Market
காஞ்சிபுரத்தில் நூற்றாண்டு பழமையான ராஜாஜி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. போதிய வசதிகள் இல்லாததால் இடிக்கப்பட்டு புதிதாக 7 கோடியில் கட்டடம் கட்டப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இப்போது வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படும் பணி நடக்கிறது. இன்னும் சில வாரங்களில் மார்க்கெட் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் செயல்பாட்டுக்கு வரும் முன்னரே மார்க்கெட் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தூண்கள் உடைந்து அதன் மீது கூரை கம்பி தொங்கி நிற்கிறது.
ஆக 12, 2024