கவுன்சிலர்கள் போராட்டத்தால் காஞ்சி மாநகராட்சி கூட்டத்தில் பதட்டம் Kanchipuram corporation meeting f
காஞ்சிபுரம் மாநகராட்சியான பின் 2022ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், மொத்தமுள்ள 51 இடங்களில் 32ல் திமுக வெற்றி பெற்று மேயர் பதவியை பிடித்தது. காஞ்சியின் முதல் மேயராக திமுக கவுன்சிலர் மகாலட்சுமி பொறுப்பேற்றார். கவுன்சிலர்களுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே அவ்வப்போது கொடி பிடித்தனர். அமைச்சர் நேரு தலைமையில் பல முறை பஞ்சாயத்து பேசியும் உட்கட்சிப் பூசல் ஓய்ந்தபாடில்லை. திமுக கவுன்சிலர்கள் உட்பட 33 பேர் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கமிஷனரிடம் கடிதம் கொடுத்தனர். அதன் படி ஜூலை 29ல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம், ஓட்டெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மேயர் உட்பட கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்திற்கு வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதமோ, ஓட்டெடுப்போ நடைபெறவில்லை. பல மாதங்களுக்குப் பின் காஞ்சி மாநகராட்சி கூட்டம் மேயர் தலைமையில் இன்று நடந்தது. மாநகராட்சி சார்பிலர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற மேயர் திட்டமிட்டார். ஆனால், அவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கோஷம் போடுவர் என எதிர்பார்க்கப்பட்டது.