/ தினமலர் டிவி
/ பொது
/ தரமற்ற பணி; கான்ட்ராக்டரை கண்டித்த கனிமொழி எம்பி | Kanimozhi MP Inspection | Dmk | Thoothukudi
தரமற்ற பணி; கான்ட்ராக்டரை கண்டித்த கனிமொழி எம்பி | Kanimozhi MP Inspection | Dmk | Thoothukudi
இது தான் தரமான கற்களா? டோஸ் விட்ட கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் வசவப்பபுரம் குட்டைக்கால் குளம் சென்னல்பட்டி முக்கவர் கால்வாய் மருதூர் அணைக்கட்டு வல்லநாடு - மணக்கரை கீழக்கால் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் கஸ்பா குளம் கோரம்பள்ளம் கண்மாய் கரைகளை பலப்படுத்தும் பணிகளை தூத்துக்குடி எம்பி கனிமொழி பார்வையிட்டார். கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் சிமென்ட் கற்களை ஆய்வு செய்த அவர் அவை தரமற்று இருப்பது பற்றி கான்ட்ராக்டரிடம் கேள்வி எழுப்பினார். நீங்களே சொல்லுங்க இது தரமானதா என கேட்டு கண்டித்தார்.
அக் 23, 2024