உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்றது அம்பலம்! Kanja Arrest | Hosur | Bangalore

வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்றது அம்பலம்! Kanja Arrest | Hosur | Bangalore

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக கெலமங்கலத்துக்கு கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒசூர் மதுவிலக்கு போலீஸார் பைரமங்கலம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக பைக் வந்த ஜோடியை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர். பைக்கை சோதனை செய்த போது சீட்டுக்கு அடியில் 8 கிலோ கஞ்சா சிக்கியது. இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் தாசிரிப்பள்ளியை சேர்ந்த கட்டட தொழிலாளி ஆனந்தன், அவரது மனைவி ராணி என்பது தெரிந்தது.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை