உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் கஞ்சா சப்ளை செய்த கும்பல் சிக்கியது எப்படி? | Kanja | 235 Kg Seized | Villupuram

தமிழகத்தில் கஞ்சா சப்ளை செய்த கும்பல் சிக்கியது எப்படி? | Kanja | 235 Kg Seized | Villupuram

போலீசுக்கு ஷாக் கொடுத்த கேரள கஞ்சா வியாபாரிகள் கேரளாவில் இருந்து மர்ம கும்பல் கஞ்சா கடத்தி வருவதாக விழுப்புரம் எஸ்பிக்கு ரகசிய தகவல் வந்தது. மாவட்டம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் தலைமையில் போலீசார் பாதிரி பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வேகமாக செல்ல முயன்ற லோடு வேனை மடக்கி சோதனையிட்டனர். அதில் 2 கிலோ, 5 கிலோ பாக்கெட்டுகளாக 116 பாக்கெட்டுகளில் 232 கிலோ கஞ்சா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். லோடு வேனுடன் மொத்த கஞ்சாவையும் பறிமுதல் செய்த ஒலக்கூர் போலீசார், காரில் வந்த கேரளாவை சேர்ந்த உதயகுமார், ஆசிப் இருவரையும் கைது செய்தனர். கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம் உள்ளிட்ட தமிழக பகுதிகளில் கஞ்சா சப்ளை செய்தது விசாரணையில் தெரிந்தது. இவர்களிடம் இருந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்த சில்லரை வியாபாரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜூலை 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !