தமிழகத்தை குறி வைக்கும் சர்வதேச கும்பல்: பகீர் தகவல் | Kanjipani Imran | Chennai
இலங்கை கொழும்புவை சேர்ந்தவர் முகமது அர்ஷத், வயது 46. தொழிலதிபர். சென்னை புளியந்தோப்பு, ஓட்டேரியில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், சட்ட விரோதமாக குடும்பத்துடன் தங்கி இருப்பதாக, ஐ.பி., எனப்படும், மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சில தினங்களுக்கு முன், முகமது அர்ஷத்தை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரானின் கூட்டாளி தான் முகமது அர்ஷத். இலங்கையில் தொழில் போட்டி காரணமாக, இம்ரானுக்கும், பூங்கொடி கண்ணன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இம்ரான் ஆதரவாளர்களை, பூங்கொடி கண்ணனின் ஆதரவாளர்கள் 2017ல் சுட்டுக் கொன்றனர்.