கண்ணபிரான் பாண்டியனை தூக்கிய போலீஸ்-பதற்றம் | kannapiran pandian arrest | thatchanallur bomb blast
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கண்ணபிரான் பாண்டியன். இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கம் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். கடந்த மாதம் திருச்சி ஜீயர்புரம் போலீசார் இவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் கண்ணபிரான். சிறைக்குள் சாதி ரீதியாக மோதல் வெடித்தது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் திருச்சி வழக்கில் ஜாமின் கிடைத்து, நேற்று விடுதலையானார். திருநெல்வேலியில் இருந்து அவரை வரவேற்க மனைவி, உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கடலூர் சிறைக்கு திரண்டு வந்தனர். சரியாக சிறைவாசலில் இருந்து கண்ணபிரான் வெளியே வந்ததும், அவரை வரவேற்று முழக்கமிட்டனர். ஏற்கனவே அங்கு காத்திருந்த திருநெல்வேலி போலீசார், சிறை வாசலை தாண்டியதும் கண்ணபிரானை கைது செய்தனர். #kannapiranpandianarrest #pasupathipandian #thachanallurbombblast