குமரியில் மதபோதகரை குடும்பத்தோடு தூக்கிய போலீஸ் | kanniyakumari | church
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள செம்பருத்திவிளை கிராமத்தை சேர்ந்தவர் மதபோதகர் ஜாண்ரோஸ். கரும்பாறை பகுதியில் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். இவரது ஜெபக்கூடத்திற்கு அப்பகுதி மக்கள் பிரார்த்தனைக்காக வருவது வழக்கம். அப்போது 13 வயது சிறுமியுடன் ஜாண்ரோஸ் அடிக்கடி பேசி வந்துள்ளார். ஒரு நாள் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை ஜெபக்கூடத்திற்கு வர சொல்லி இருக்கிறார். தனியாக சென்ற சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். மதபோதகர் மீது மார்த்தாண்டம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகார் கொடுத்ததை அறிந்த ஜான்ரோஸ் தலைமறைவானார். அவரை தேடி வந்த போலீசார் கரும்பாறை பகுதி அருகே ஒரு வீட்டில் மறைந்து இருந்ததை கண்டுபிடித்தனர். ரகசியமாக கண்காணித்து ஜான்ரோஸை சுற்றிவளைத்து கைது செய்தனர். அப்போது அவரது மனைவி, மகன் உடன் இருந்தனர். குற்ற செயலுக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஜெலின்பிரபா, அவரது மகன் பிரதீப்பையும் கைது செய்த போலீசார் மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்தனர்.