உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீருடை புடவையை வாங்க மறுத்த தூய்மை பணியாளர்கள்

சீருடை புடவையை வாங்க மறுத்த தூய்மை பணியாளர்கள்

தீபாவளியை ஒட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு புதிய சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. மேயர் முத்துதுரை, ஆணையர் சித்ரா உள்ளிட்டோர் யூனிபார்ம் புடவைகள் வழங்க வந்தனர். ஆனால், தூய்மை பணியாளர்கள் அந்த புடவைகளை வாங்க மாட்டோம் என கூறிவிட்டனர். அந்த புடவைகள் பாலியஸ்டர் துணி என்பதால் அவர்கள் அதை விரும்பவில்லை. பெண்களை மேயர் சமாதானப்படுத்தி வாங்க வைக்க முயன்றார். அரசுதான் இதை கொடுக்கிறது. அடுத்த முறை துணியை மாற்ற சொல்கிறோம் என்றார். ஆனால் தூய்மை பெண் ஊழியர்கள் ஏற்கவில்லை.

அக் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை