/ தினமலர் டிவி
/ பொது
/ உண்ட மயக்கம் தெளியும் வரை எம்எல்ஏக்கள் ரெஸ்ட் எடுக்கலாம் | Karnataka assembly | Sleep Sofa
உண்ட மயக்கம் தெளியும் வரை எம்எல்ஏக்கள் ரெஸ்ட் எடுக்கலாம் | Karnataka assembly | Sleep Sofa
கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 15ல் தொடங்கியது. ஜூலை 26 வரை நடக்கும் கூட்டத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. சட்டசபை கூட்ட தொடர் காலையில் துவங்கி மதியம் வரை நடக்கும். அதன்பின் மதியம் உணவு இடைவேளை விடப்படும். அப்போது விதான் சவுதா அருகில் உள்ள எம்எல்ஏக்கள் பவனுக்கு செல்லும் பலர் மதிய கூட்டத்துக்கு வர தாமதம் ஆகிறது. மதிய உணவு முடிந்ததும் எம்எல்ஏக்கள் சிலர் அறையில் படுத்து துாங்கி விடுவதாக சபாநாயகர் காதருக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து சட்டசபையில் சபாநாயகர் காதர் வெளிப்படையாக பேசினார்.
ஜூலை 19, 2024