/ தினமலர் டிவி
/ பொது
/ பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு சித்தராமையா பகிரங்க சவால் | Karnataka CM Siddaramaiah | Dares PM
பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு சித்தராமையா பகிரங்க சவால் | Karnataka CM Siddaramaiah | Dares PM
காராஷ்டிராவின் அகோலாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மகாராஷ்டிர தேர்தல் என்ற பெயரில், கர்நாடகாவில் வசூல் இரட்டிப்பாகிவிட்டதாக குற்றம் சாட்டினார். மகாராஷ்டிராவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கர்நாடகா, மகாராஷ்டிராவில் மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள மதுபான கடைகளில் 700 கோடி ரூபாய் அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் மோடி அப்போது குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டம் ஷிக்கானில் நடந்த இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்-வர் சித்தராமையா, மோடியின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
நவ 11, 2024