முடா ஊழலால் சித்தராமையாவுக்கு நெருக்கடி! Karnataka MUDA Scam | Siddaramaiah wife Parvathy
மைசூரில் முடா என்றழைக்கப்படும் நகர வளர்ச்சி ஆணையம், மாற்று நிலம் ஒதுக்குவதில் மெகா ஊழலில் ஈடுபட்டதாக, கன்னட ஊடகம் செய்தி வெளியிட்டது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில், 3,800 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த கர்நாடகா அரசு குழு அமைத்துள்ளது. இந்நிலையில், மைசூரு நகர வளர்ச்சி ஆணைய ஊழல் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதி கோரியும், சித்தராமையா பதவி விலக வேண்டும் எனவும் பாஜ எம்எல்ஏக்கள் நேற்று இரவு சட்டசபையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், பாஜ மாநிலத் தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏ.க்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர். நேற்றிரவு சட்டசபைக்கு படுக்கைகளுடன் வந்த பாஜ, மஜத எம்எல்ஏ.க்கள் அங்கேயே படுத்து உறங்கினர்.