உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பனி மூட்டத்தால் நடந்த விபத்தில் 10 பேர் உயிர் பறிபோன சோகம் Karnataka|10 killed 15 injured

பனி மூட்டத்தால் நடந்த விபத்தில் 10 பேர் உயிர் பறிபோன சோகம் Karnataka|10 killed 15 injured

கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டம், சவனூரில் இருந்து இன்று அதிகாலை காய்கறி மூட்டைகளுடன் லாரி ஒன்று உத்தர கன்னட மாவட்டம் கும்தா சந்தைக்கு சென்றுகொண்டிருந்தது. காய்கறி மூட்டைகளின் மீது தொழிலாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். எல்லாபூர் தாலூகாவில் குல்லப்பூர் கிராமம் அருகே லாரி நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. பனி மூட்டம் காரணமாக டிரைவர் முன்னே சென்ற ஒரு வாகனம் மீது வேகமாக மோதினார். இதனால் லாரி நிலை தடுமாறி சாலையை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ