உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெங்களூரில் 4 கார், 5 பைக் காலி Bengaluru Bus accident| Karnataka Careless bus driver

பெங்களூரில் 4 கார், 5 பைக் காலி Bengaluru Bus accident| Karnataka Careless bus driver

ஒத்தக்கையில் ஸ்டைலாக பஸ்சை ஓட்டிய டிரைவர் பெங்களூரு ஹெப்பல் மேம்பாலத்தில் வால்வோ பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. டிரைவர் பஸ்சை ஒத்தக்கையால் ஸ்டைலாக ஓட்டினார். திடீரென பஸ்சின் பிரேக் பிடிக்காததால், முன்னால் சென்ற டூவீலரில் மோதினார். தொடர்ந்து ஓடிய பஸ் முன்னால் சென்ற வாகனங்கள் மீதுஅடுத்தடுத்து மோதியது. 4 கார்கள், 5 பைக்குகள் மீது மோதியது. கண்டக்டர் ஓடிப்போய் என்னய்யா பண்றே? பிரேக்கை அழுத்துய்யா? என டிரைவரை பார்த்து கத்துகிறார். கடைசியில் ஒரு கார் மீது மோதி பஸ் நின்றது. இந்த விபத்தில், 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் விபத்து நடந்த விதம் அப்படியே பதிவானது.

ஆக 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை