உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கட்சி கொள்கைகளை விட நாட்டின் வளர்ச்சி முக்கியம் Rajnath singh| Mk Stalin| karunanidhi centenary coin

கட்சி கொள்கைகளை விட நாட்டின் வளர்ச்சி முக்கியம் Rajnath singh| Mk Stalin| karunanidhi centenary coin

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். breath தமிழில் வணக்கம் சொல்லி உரையை தொடங்கினார் ராஜ்நாத்சிங். 1960 முதல் இப்போது வரை திமுக வலுவான கட்சியாக இருப்பதற்கு அடித்தளமிட்டவர் கருணாநிதி. நாட்டின் தலைசிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், கலாச்சாரம் சமூக நீதியின் அடையாளமாகவும் கருணாநிதி திகழ்ந்தார். தேசிய அளவில் கூட்டணி ஆட்சியை திறம்பட செயல்படுத்தியவர். நாட்டின் கூட்டாட்சியை பலப்படுத்தும் தலைவராகவும் திகழ்ந்தார். மகளிர் சுயஉதவிக்குழு தொடங்கிய பெருமைக்குரியவர். மகளிர் மேம்பாடு, விளிம்பு நிலை மக்கள் நலனுக்கான திட்டங்களை தந்தவர். மக்கள் குறைகளை கேட்க மனுநீதி திட்டத்தை கொண்டுவந்தவர். கருணாநிதியின் போராட்டங்கள் தீவிரமானவை, துணிச்சல் மிக்கவை. தமிழ் இலக்கியம், சினிமா துறையிலும் தனி முத்திரை பதித்தவர். இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும் தமிழகத்திற்காக பாடுபட்டவர்.

ஆக 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி