சேலத்தில் இரவில் நடந்த சம்பவம்! போலீஸ் விசாரணை | Karunanidhi statue | Salem | DMK
சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் 2 வருடங்களுக்கு முன் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 16 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது. 75 லட்சம் செலவில் 4 அடி உயரத்தில் பீடத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்திருந்தார். இன்று காலை அப்பகுதியினர் இச்சிலையின் மார்பு மற்றும் கால் பகுதியில் கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டு இருப்பதை கண்டனர். சிலை மீது பெயிண்ட்டை ஊற்றியது யார்? என்ன காணம் என்று தெரியவில்லை. அதிகாலை மர்ம நபர்கள் பெயிண்ட் ஊற்றி சென்று இருக்கலாம் என சந்தேகின்றனர். தகவல் அறிந்து திமுகவினர் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.