கருணாநிதி சமாதி சம்பவம்: வெடித்த அண்ணாமலை karunanidhi memorial | Annamalai | sekar babu | bjp vs dmk
சட்டசபையில் ஒவ்வொரு துறை மானிய கோரிக்கை துவங்கும் போதும், சம்மந்தப்பட்ட துறையின் திமுக அமைச்சர்கள் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு சட்டசபை வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் இன்று இந்து அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை துவங்கியது. சம்மந்தப்பட்ட துறை அமைச்சரான சேகர் பாபு, சட்டசபை வருவதற்கு முன்பு கருணாநிதி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். இதற்காக கருணாநிதி சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதில் இந்த கோயில் கோபுரம் டிசைன் போடப்பட்டு, இந்து அறநிலையத்துறை என்று எழுதப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ‛கடவுளே இல்லை என்று சொன்ன ஒருவரின் சமாதியில் கோயில் கோபுரத்தை வரைந்து இந்துக்கள் மனதை புன்படுத்தி விட்டார்கள் என்று பாஜவினரும், இந்து அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.